நடுவானில் பைலட் திடீர் மயக்கம்; பதறிய பயணிகள் - என்ன நடந்தது?
நடுவானில் விமானி மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடுவானில் விமானம்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் இருந்து புறப்பட்டு ஓஹியோவின் கொலம்பஸ் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானத்தை இயக்கிய விமானிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கினார்.
இதனால், விமானத்தை உடனடியாக தரையிறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில், மற்றொரு பைலட்டால் நிலைமையை சமாளிக்க முடியாத சூழலில், அதே விமானத்தில் பயணித்த வேறொரு விமான நிறுவனத்தை சேர்ந்த பைலட் ஒருவர், காக்பிட் அறைக்குள் நுழைந்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
மயங்கிய விமானி
தொடர்ந்து, விமானத்தை லாஸ் வேகாஸ் விமான நிலையத்தில் தரையிறக்கவும் உதவினார். அதனையடுத்து மயக்கமடைந்த பைலட் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது. தற்போது உதவிய பயணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.