நிமிடங்களில் கோடிக்கணக்கில் சம்பளம்.. பணக்கார இசையமைப்பாளர்களில் இவர் தான் டாப் - யார் அது?
தனியிசை மூலம் நிமிடங்களில் கோடிக்கணக்கில் சம்பளம் பெரும் பிரபலம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தனியிசை
பாலிவுட் முதல் கோலிவுட் வரை உள்ள திரைப்படங்களில் இசை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.இப்படி தனது தனித்துவமான இசை மூலம் பல இசையமைப்பாளர் மற்றும் பாடகர்கள் பிரபலமாகினர். அந்த வரிசையில், இந்தியில் தில்ஜித் தோசாஞ்ச், அர்ஜித் சிங் ,ஆகியோர் இசை நிகழ்ச்சி நடத்தி கோடிக்கணக்கில் சம்பளம் பெற்று வருகின்றனர்.
அதன்படி, தமிழ் சினிமாவில் இன்றைக்கு தனியிசை பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இதனால் ஹப் ஹாப் ஆதி, சந்தோஷ் நாராயணன் தொடங்கி ‘தெருக்குரல்’அறிவு உள்ளிட்டோர் பிரபலமாகி வருகின்றனர்.
அந்த வரிசையில், தமிழகத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர்.
கோடிக்கணக்கில் சம்பளம்
ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். இந்த நிலையில் இந்தியாவின் பணக்கார இசையமைப்பாளர்களில் முதன்மையானவராகத் திகழ்கிறார் .
இது குறித்து GQ INDIA வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 57-வயதான ஏ.ஆர்.ரஹ்மானின் சொத்து மதிப்பு ரூ.1728 கோடி உள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும் ஒரு பாடலுக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்கும் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் பாடகர் என்ற பெருமையைப் பெற்று வருகிறார்.