ரத்த நிறத்தில் மாறிய ஆறு - காலையில் எழுந்து பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!
நதி ரத்த நிறமாக மாறியது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
சலாடோ நதி
அர்ஜெண்டினா, பியூனஸ் அயர்ஸ் நகரில் சலாடோ நதி அமைந்துள்ளது. இந்த நதியின் ஒரு பக்கம் முழுவதும் பசுமையான சூழுலுக்கு நடுவே குடியிருப்பு பகுதிகள் உள்ளது.
மற்றொரு புறம் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதிகாலையில் கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது.
அதிகாரிகள் ஆய்வு
அதிர்ச்சியடைந்த மக்கள் எழுந்து பார்க்கையில், தொழிற்சாலை கழிவுகளை எரிக்கும் இடத்தில் இருந்து வெளியான மோசமான புகை மற்றும் சாம்பலால் அந்த பகுதியே மாசு அடைந்து காணப்பட்ட நிலையில்,
ரத்த நிறத்தில் சலாடோ நதியின் நிறமும் மாறி போயிருந்துள்ளது. உடனே அந்த இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அதன் மாதிரிகளை சேகரித்து சலாடோ நதியின் நிறம் மாறியதற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.