பிச்சை எடுத்து உண்ணும் நிலையில் நாடு - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
திருடர்களான இந்த ஆட்சியாளர்களோடு எந்த விதமான டீலும் அரசியலும் எனக்கு இல்லை எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
இலங்கை
பிச்சை எடுத்து உண்ணும் நிலைக்கு நாடு வந்துவிட்டதாவும் கூறியுள்ளார். அந்தச் செய்தியின்படி, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், நாட்டின் தேசிய பாதுகாப்பை முற்றாக ஒழித்து விட்டது. ராணுவத்தின் ஆட்சியையே இவர்கள் தேசிய பாதுகாப்பாகக் கருதினார்கள்.
சஜித் பிரேமதாச
தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட காரணிகளான பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளை தேசிய பாதுகாப்பாக இவர்கள் கருதவில்லை, என்று சஜித் பிரேமதாச கூறினார்.
அதோடு, இதனால் உலகளவில் ஏழ்மையான நாடுகளில் இலங்கையும் இடம் பிடித்துள்ளது எனவும் கூறினார். மேலும், தற்போது வெளிநாடுகளிடமிருந்து பிச்சை எடுத்து உணவை உட்கொள்ளும் நிலைக்கு நாடு வந்துள்ளது.
லஞ்ச ஊழல்
பிச்சை எடுக்கும் நிலையில் நாட்டின் பெருமதிப்பு மிக்க சொத்துகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியிலும் லஞ்ச ஊழல் செயற்பாடுகளை ஆளும் தரப்பினர் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.
இப்படியான ஆட்சியாளர்களுடன் ஒருபோதும் பங்காளிகளாக இணைந்து ஆட்சியை அமைக்க போவதில்லை, அவ்வாறு செய்தால் நாட்டு மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பது ஆகிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொது இடத்தில் புகை பிடிப்பவர்களுக்கு ரூ.2,000 அபராதம்!