ஒரு மகன் போனாலும், IAS படிச்ச நிறைய மகன்கள், மகள்கள் எனக்கு இருக்காங்க - சைதை துரைசாமி உருக்கம்!

Tamil nadu Accident Death
By Jiyath Feb 14, 2024 09:49 AM GMT
Report

ஒரு மகன் போனாலும், தனக்கு ஐஏஎஸ் படித்த மகன்கள், மகள்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று சைதை துரைசாமி உருக்கமாக பேசியுள்ளார்.

வெற்றி துரைசாமி மறைவு

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர் கடந்த 4-ம் தேதி தனது உதவியாளர் கோபிநாத்துடன் இமாச்சலப் பிரதேசத்திற்கு சென்றிருந்தார்.

ஒரு மகன் போனாலும், IAS படிச்ச நிறைய மகன்கள், மகள்கள் எனக்கு இருக்காங்க - சைதை துரைசாமி உருக்கம்! | Saithai Duraisamy Tears About Vetri Duraisamy

அவர்கள் இருவரும் வாடகை கார் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் சடலமாகவும், கோபிநாத் காயங்களுடனும் மீட்கப்பட்டார்.

இந்த விபத்தில் மாயமான வெற்றி துரைசாமியை தேடும் பணி கடந்த 8 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டு சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

வெற்றி துரைசாமி மரணம்; துக்கம் தாளாமல் நடிகர் அஜித் செய்த காரியம் - வைரல் Video!

வெற்றி துரைசாமி மரணம்; துக்கம் தாளாமல் நடிகர் அஜித் செய்த காரியம் - வைரல் Video!

சைதை துரைசாமி உருக்கம் 

இதையடுத்து வெற்றி துரைசாமியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், நடிகர் அஜித் உள்ளிட்ட திரை பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.

ஒரு மகன் போனாலும், IAS படிச்ச நிறைய மகன்கள், மகள்கள் எனக்கு இருக்காங்க - சைதை துரைசாமி உருக்கம்! | Saithai Duraisamy Tears About Vetri Duraisamy

பின்னர் கண்ணம்மாபேட்டையில் உள்ள மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சைதை துரைசாமி "எனக்கு ஆறுதல் சொன்ன அத்தனை பேருக்கும் நன்றி. சக மனிதனுக்காக வாழ வேண்டும். இங்குள்ள 259 சாதிகளில் 170 சாதியினர் அரசு பணியில் உள்ளனர். மீதமுள்ள 89 பிரிவுகளில் உள்ளவர்களை அரசு பணியில் அமர வைப்பேன் என இந்த நேரத்தில் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன்.

மனம் கலங்க மாட்டேன். எனக்கு ஒரு மகன் போனாலும், ஐஏஎஸ் படித்த மகன்கள், மகள்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நான் இத்தனை மகன்களை பெற்றிருக்கிறேன். சேவையை பிரதானப்படுத்தி வாழ்க்கையை அமைத்துக் கொள்வேன் என்று சூளுரைக்கிறேன்" என்று கண்ணீருடன் கூறினார்.