ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்ததற்கு காரணம் இதுதான் - வெளிப்படையாக அறிவித்த சாய்ரா பானு
ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்தது குறித்து அவரது மனைவி சாய்ரா பானு விளக்கமளித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து
ஆஸ்கார், கிராமி, கோல்டன் குளோப் உள்ளிட்ட விருதுகளை பெற்று உலகளவில் இந்திய இசையின் அடையாளமாக வலம் வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன், ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்திருந்தார். இதனையடுத்து ஏ.ஆர்.ரஹ்மானும் தனது எக்ஸ் பக்கத்தில் மனைவியை பிரிவதாக அறிவித்தார்.
வதந்தி
இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து, ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்குழுவில் பேஸ் கிட்டாரிஸ்டாக பணியாற்றிய மோகினி டே என்பவர் அவரது கணவரை பிரிவதாக அறிவித்திருந்தார்.
இதனையடுத்து ஏ.ஆர் ரஹ்மான் பிரிவையும் இவரது பிரிவையும் தொடர்ப்பு படுத்தி பலரும் பலவிதமான கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர். இதையடுத்துஅவதூறு பரப்புபவர்கள் அதை நீக்க விட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஏ.ஆர் ரஹ்மான் சார்பில் எச்சரிக்கப்பட்டது.
சாய்ரா பானு விளக்கம்
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானை பிரிவது ஏன் என்று அவரது மனைவி சாய்ரா பானு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள குரல் பதிவில், எனக்கு கடந்த 2 மாதங்களாக உடல்நிலை சரியில்லை என்பதால் மும்பையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன். சிகிச்சைக்காக தொடர்ந்து மும்பையில் தங்க வேண்டிய சூழ்நிலை காரணமாக ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து கொஞ்ச காலம் நான் பிரேக் எடுத்துக் கொள்ள விரும்பினேன். என் உடல்நிலை காரணமாக தான் இந்த பிரிவு.
மேலும், ஏ.ஆர்.ரகுமானின் பிஸியான இந்த நேரத்தில் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. என் குழந்தைகளையும் நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அவர் மீது நான் வைத்த நம்பிக்கை என் வாழ்வை விட பெரியது. அவர் அந்தளவு சிறந்த மனிதர். நான் அவரை அந்தளவு நேசிக்கிறேன்.
ஏ.ஆர்.ரஹ்மான் உலகின் சிறந்த மனிதர். அவரை பற்றி அவதூறாக பேசுவதை நிறுத்துமாறு அனைத்து யூ டியூப் சேனல் மற்றும் ஊடகங்களை கேட்டு கொள்கிறேன். நான் உடல்நிலை சரியான பிறகு சென்னை திரும்புவேன்" என தெரிவித்துள்ளார்.