விவாகரத்துக்கு பிறகு இருவரும் எடுத்த முடிவு - மீண்டும் இணையும் ஜிவி & சைந்தவி!
விவாகரதுக்கு பிறகு ஜிவி பிரகாஷ்குமார் மற்றும் சைந்தவி மீண்டும் இணைந்து பாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவாகரத்து
2013-ஆம் ஆண்டு பின்னணி பாடகி சைந்தவியை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அண்மையில் இருவரும் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுகொண்டனர். அதனை அதிகாரபூர்வமாக இருவரும் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
இந்த சூழலில், ஜிவி பிரகாஷ்குமார். கதாநாயகனாக நடித்துக் கொண்டே இசையமைக்கும் வேலைகளையும் சிறப்பாகச் செய்து வருகிறார். அவரது இசையமைப்பில் கடந்த மாதம் வெளிவந்த 'அமரன்' படம் 300 கோடி வசூல் படமாகவும், ‛லக்கி பாஸ்கர்' ரூ.100 கோடி வசூல் படமாகவும் அமைந்துள்ளது.
ஜிவி & சைந்தவி
தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில், ஜிவி பிரகாஷின் இசை நிகழ்ச்சி ஒன்று அடுத்த மாதம் டிசம்பர் 7ம் தேதி மலேசியாவில், கோலாலம்பூரில் நடைபெற உள்ளது.
'செலிபிரேஷன் ஆப் லைப்' என தலைப்பு வைத்துள்ள அந்நிகழ்ச்சியில் ஜிவியின் முன்னாள் மனைவியும் பாடகியுமான சைந்தவியும் கலந்து கொண்டு பாட உள்ளார். அது பற்றிய வீடியோ அறிவிப்பு ஒன்றையும் சைந்தவி வெளியிட்டுள்ளார். அதில் ஜிவி பற்றி குறிப்பிடும் போது, 'ஜிவி பிரகாஷ் சார்', என்று குறிப்பிட்டுள்ளார்.