விவகாரத்தின் பின்னணி இதுவா? 11 வருட திருமணம் - பிரிந்த ஜி.வி பிரகாஷ் - சைந்தவி
ஜி.வி.பிரகாஷ் சைந்தவி
2013-ஆம் ஆண்டு பின்னணி பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. சில தினங்களாக இருவரும் விவாகரத்து பெறப்போவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.
கருத்து வேறுபாடே இவர்களுக்குள் பிரச்சனை என கூறப்படுகிறது. இது குறித்து இருவருமே வை திறக்காமல் இருந்த நிலையில்,பிரச்சனை இல்லை வெறும் புரளி தான் என மக்கள் நினைத்து இதற்கு ஜி.வி.பிரகாஷ் முற்றுப்புள்ளி வைப்பார் எனஎதிர்பார்த்தனர்.
11 வருட திருமண
ஆனால், அண்மையில் அதிர்ச்சியளிக்கும் விதமாக, தன்னுடைய பிரிவை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், எங்கள்
11 வருட திருமண வாழ்க்கைக்கு பின் சமரசமாக பிரிய முடிவெடுத்து இருக்கிறோம். எங்கள் மன நிம்மதிக்காக இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். மீடியா மற்றும் நண்பர்கள் இந்த நேரத்தில் எங்கள் privacyக்கு மதிப்பளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என ஜி.வி.பிரகாஷ் கூறி இருக்கிறார்.
இவர்களின் பிரிவிற்கு என்ன காரணம் என்பது இன்னும் தெரியாத நிலையில், ஜி.வி.பிரகாஷின் முடிவை பார்த்து பல ரசிகர்கள் அதிர்ச்சி தான் அடைந்துள்ளார்கள்.