பிரிஞ்சு 6 மாசமாச்சு - விவாகரத்திற்கு இது தான் காரணமா? என்ன பிரச்சனை ஜிவி பிரகாஷுக்கு!
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல தரப்பட்ட மக்களை கவரந்தவர் ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்
ஷங்கர் தயாரிப்பில் வெளியான "வெயில்" படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினார் ஜி.வி.பிரகாஷ் குமார். முதல் படத்தின் பாடல்களே பெரிதும் கவனம் பெற்ற நிலையில், சில காலத்திலேயே ரஜினியுடன் "குசேலன்"படத்தில் பணிபுரிந்தார்.
பொல்லாதவன், ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம், மயக்கம் என்ன, தலைவா என பல படங்களுக்கு இசையமைத்த அவர், சூர்யா நடிப்பில் வெளியான "சூரரை போற்று" படத்திற்காக தேசிய விருதை வென்றிருந்தார்.
இசையமைப்பாளர் என்பதை தாண்டி நடிகராகவும் கலக்கி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். டார்லிங் படத்தில் முதன் முதலில் திரையில் தோன்றிய அவர், அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இவர், 2013-ஆம் ஆண்டு பின்னணி பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. சில தினங்களாக இருவரும் விவாகரத்து பெறப்போவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. கருத்து வேறுபாடே இவர்களுக்குள் பிரச்சனை என கூறப்படுகிறது.
இருவரும் கடந்த 6 மாதங்களாகவே தனியாக வாழ்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இவை அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்ட செய்தியல்ல. இதனை இந்த தம்பதிகள் விரைவில் பொய்யாக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.