கார் விபத்து..சடலமாக மீட்கப்பட்ட டிரைவர்..! அதிமுகவின் சைதை துரைசாமி மகன் ஆற்றில் மாயம்..!

ADMK Accident
By Karthick Feb 05, 2024 02:56 AM GMT
Report

அதிமுகவின் மாஜி அமைச்சர் சைதை துரைசாமியின் மகன் நதியில் விழுந்து காணாமல் போகியுள்ளார்.

சைதை துரைசாமி

அதிமுகவில் சென்னை மாவட்டத்தில் மிகவும் செல்வாக்கு மிக நபர்களில் மிகவும் முக்கியமானவர் சைதை துரைசாமி. சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர், சைதாப்பேட்டை தொகுதியின் முன்னாள் MLA என பல பதவிகளில் அவர் இருந்துள்ளார்.

saidai-duraisamy-son-disappears-falling-into-river

இவரது மகன் வெற்றி துரைசாமி. வெற்றி தனது நண்பர் கோபிநாத் என்பவருடன் இமாச்சல பிரதேசம் சென்றுள்ளார். காரில் நேற்று மாலை பயணித்து கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இன்னோவா கார், சட்லெஜ் ஆற்றில் விழுந்துள்ளது.

லாரி - கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி!

லாரி - கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி!

விபத்தில், காரை ஓட்டிய செந்தில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில், வெற்றியின் நண்பர் கோபிநாத் பலத்த காயங்களுடன் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

saidai-duraisamy-son-disappears-falling-into-river

ஆனால், ஆற்றில் விழுந்த வெற்றி துரைசாமி எங்கிருக்கிறார் என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேச போலீசார் தமிழ்நாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்க தொடர்ந்து வெற்றிதுரைசாமியை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது.