ஆண்களுக்கு ரூ.50 தான் - ஆனா லட்ச கணக்குல செலவு பண்ணியும்..! சாய் பிரியங்கா வேதனை

Karthick
in பிரபலங்கள்Report this article
பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் அறிமுகமானவர் சாய் பிரியங்கா.
சாய் பிரியங்கா
பார்த்திபன் இயக்கி, நடித்த இரவின் நிழல் படத்தில் நடித்தவர் நடிகை சாய் பிரியங்கா ரூத். மேலும், மெட்ரோ, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
அவ்வப்போது ஜாலியான பதிவுகளை பலவற்றை பதிவிடும் சாய் பிரியங்கா, தற்போது சோப்பு குறித்து பதிவிட்டுள்ளது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
வெறும் 50 ரூபாய் தான்
அதாவது தன் வீட்டில் இருக்கும் ஆண்கள் வெறும் 20 முதல் 50 ரூபாய் வரையிலான சோப்பை பயன்படுத்தும் போதே மிகவும் அழகாக இருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர்,
ஆனால் திரையில் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக லட்ச கணக்கில் செலவு செய்தும் அது போன்ற ஒரு பொலிவை பெற முடியவில்லை என வருத்தம் தெரிவித்தார்.
இந்த வீடியோவை கண்ட பலரும், உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.