குடிபோதையால் போன வாழ்க்கை - இனி அப்படி பண்ணிட்டு தான் திருமணம் - ஸ்ரீதிவ்யா சபதம்..!
அறிமுகமான ஒரு சில படங்களிலேயே முன்னணி நடிகையாக முன்னேறினார் ஸ்ரீதிவ்யா.
ஸ்ரீதிவ்யா
சிவகார்த்திகேயனுடன் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்", "காக்கி சட்டை", அதர்வாவுடன் "ஈட்டி", விஷ்ணு விஷாலுடன் "ஜீவா" என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து கவனிக்கவைத்தார் ஸ்ரீதிவ்யா.
தமிழ் சினிமாவின் அடுத்த முன்னணி நாயகியாக வளம் வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக மொத்தமாக படவாய்ப்புகளே இல்லாமல் போனது ஸ்ரீதிவ்யாவிற்கு.
பிரபல நடிகரின் வீட்டு விருந்தில் குடித்து விட்டு ஸ்ரீதிவ்யா செய்த காரியம்...? - வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள் ...!
காரணம் தேடி பலருக்கும் கிடைத்த பதில், துணை நடிகர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சியில் அனைவரின் முன்னிலையிலும், குடிபோதையில் அவர் அதிகமாக அலப்பறை செய்ததாக கூறப்பட்டது.
ஆனால், அது குறித்து எந்தவித அதிகாரபூர்வ தகவலும் இல்லாத நிலையிலும், பலரும் இதனையே எழுதுகின்றனர்.
திருமணம்
இந்நிலையில், தான் தற்போது மீண்டும் நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்தி - நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் நடித்து வரும் ஸ்ரீதிவ்யா, உறுதி ஒன்று எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, விட்ட இடத்தை பிடித்து மீண்டும் முன்னணி நாயகியாக மாறிய பிறகு தான் திருமணம் செய்து கொள்வது என்ற முடிவில் ஸ்ரீதிவ்யா இருப்பதாக கூறப்படுகிறது.