கேவலமான நோக்கம்; பேசியே ஆகனும் - அந்த தகவலால் கொதித்த சாய்பல்லவி!

Sai Pallavi
By Sumathi Sep 22, 2023 02:30 PM GMT
Report

 திருமண வதந்திக்கு நடிகை சாய் பல்லவி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சாய் பல்லவி

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் நடிகை சாய் பல்லவி. தனுஷூடன் இணைந்து ரவுடி பேபி பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் பட்டி தொட்டியெங்கும் பரவியது.

கேவலமான நோக்கம்; பேசியே ஆகனும் - அந்த தகவலால் கொதித்த சாய்பல்லவி! | Sai Pallavi Slams The Rumour Of Her Marriage

தொடர்ந்து ஷ்யாம் சிங்கா ராய், விராத பர்வம், கார்கி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் இவரது நடிப்பு பெரும் பாராட்டுகளை பெற்றது. தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் கமிட்டாகி உள்ளார்.

திருமண வதந்தி

தொடர்ந்து, அப்பட பூஜையில் கழுத்தில் மாலையுடன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியுடன் சாய்பல்லவி நிற்கும் ஃபோட்டோ ஒன்று வெளியாகி வேகமாக பரவியது. மேலும், இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாகவும் வதந்திகள் கிளம்பியது.

இந்நிலையில், இது குறித்து சாய்பல்லவி பகிர்ந்துள்ள பதிவில், "நிஜமாகவே என்னை பற்றி வரும் வதந்திகளை நான் பொருட்படுத்துவதில்லை. அனால், என்னோடு சேர்த்து என் குடும்பம் போன்ற நண்பர் இந்த வதந்தியில் இணைகிறார் என்றால் இதை பற்றி நான் பேசியே ஆகவேண்டும்.

எனது படத்தின் பூஜையின்போது எடுக்கப்பட்ட ஒரு போட்டோவை வேணுமென்றே கிராப் செய்து கேவலமான நோக்கத்தோடு பொய்யான அக்கவுண்டுகள் பகிர்ந்துவருகிறது. எனது திரைப்படம் குறித்த ஆனந்தமான தகவல்களை பகிரலாம் என நினைக்கும்போது,

கவர்ச்சியாக நடிப்பதில்லை... இதனால்தான்? சாய் பல்லவி ஓபன் டாக்!

கவர்ச்சியாக நடிப்பதில்லை... இதனால்தான்? சாய் பல்லவி ஓபன் டாக்!

வேலையற்றவர்களின் இந்த வேலை எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. இம்மாதிரியான அசௌகரியமான விஷயத்தை செய்வது முற்றிலும் கேவலமானது" எனக் குறிப்பிட்டுள்ளார்.