சாய் பல்லவியின் நீளமான முடிக்கு காரணம் இதுதானாம் - அவரே சொன்ன ரகசியம்!
நடிகை சாய் பல்லவி தனது நீண்ட கூந்தலின் ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.
சாய் பல்லவி
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் நடிகை சாய் பல்லவி. தனுஷூடன் இணைந்து ரவுடி பேபி பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் பட்டி தொட்டியெங்கும் பரவியது.
தொடர்ந்து ஷ்யாம் சிங்கா ராய், விராத பர்வம், கார்கி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் இவரது நடிப்பு பெரும் பாராட்டுகளை பெற்றது. தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் கமிட்டாகி உள்ளார்.
கூந்தல் ரகசியம்
இந்நிலையில், நடிகை சாய்பல்லவி தனது நீண்ட கூந்தலின் ரகசியம் குறித்து கூறியுள்ளார். நான் இயற்கை மீது நம்பிக்கை கொண்டவள் எப்போதும் இயற்கையான உணவையே எடுக்க ஆசைப்படுவேன். இதனால், சருமத்தை பாதுகாக்க பழங்கள் மற்றும் பழச்சாறு போன்றவற்றை எடுத்துக்கொள்வேன்.
தனக்கு செயற்கை அழகு பொருட்கள் மீது தனக்கு நம்பிக்கை என்பதால், என்னுடைய கூந்தலுக்கு கற்றாழையை பயன்படுத்துவேன். கூந்தலின் உற்ற நண்பன் கற்றாழை தான். தலைமுடியில் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தினால் பொடுகைத் தடுக்கும். இதனால் முடி வளர்ச்சி தூண்டும் எனத் தெரிவித்துள்ளார்.