எத்தனை கோடி குடுத்தாலும் அத பண்ண மாட்டேன்; தேடி வந்த வாய்ப்பு - நிராகரித்த சாய் பல்லவி?

Sai Pallavi Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath May 09, 2024 04:07 PM GMT
Report

நடிகை சாய் பல்லவி குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

சாய் பல்லவி

'பிரேமம்' என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. அந்த படத்தில் மலர் டீச்சர் என்ற இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்தார். பின்னர் நடிகர் தனுஷ் நடித்த மாரி 2 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

எத்தனை கோடி குடுத்தாலும் அத பண்ண மாட்டேன்; தேடி வந்த வாய்ப்பு - நிராகரித்த சாய் பல்லவி? | Sai Pallavi Rejected Fairness Cream Ad

தொடர்ந்து சூர்யாவுடன் NGK படத்தில் நடித்தார். தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இன்னும் பெயரிடப்படாத 'SK21' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

62 வயதாகியும் கல்யாணம் பண்ணிக்கல; இப்படி ஒரு காரணமா? மனம் திறந்த கோவை சரளா!

62 வயதாகியும் கல்யாணம் பண்ணிக்கல; இப்படி ஒரு காரணமா? மனம் திறந்த கோவை சரளா!

நடிக்க மறுப்பு 

அதாவது, கடந்த 2019-ம் ஆண்டு முன்னணி அழகுசாதன கிரீம் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தங்கள் கம்பெனி விளம்பரத்தில் நடிக்குமாறு சாய் பல்லவியை அணுகியதாம். அந்த விளம்பரத்தில் நடிக்க ரூ.2 கோடி சம்பளமும் டீல் பேசப்பட்டதாம். ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் அதில் நடிக்க மாட்டேன் என சாய் பல்லவி மறுத்துவிட்டாராம்.

எத்தனை கோடி குடுத்தாலும் அத பண்ண மாட்டேன்; தேடி வந்த வாய்ப்பு - நிராகரித்த சாய் பல்லவி? | Sai Pallavi Rejected Fairness Cream Ad

நடிகை மட்டுமல்லாம் ஒரு மருத்துவருமான சாய் பல்லவி அழகு சாதன பொருட்களால் சருமத்துக்கு ஏற்படும் ஆபத்து குறித்து நன்கு அறிந்திருக்கிறார். இதனால் தான் அழகுசாதன நிறுவனம் அணுகியபோது அது சம்பந்தமான விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என மறுத்ததாக கூறப்படுகிறது.