சாய் பல்லவியின் 10 வருட காதலர் இவர்தான் - யார் தெரியுமா?

Sumathi
in பிரபலங்கள்Report this article
தனது காதல் குறித்து நடிகை சாய் பல்லவி மனம் திறந்துள்ளார்.
நடிகை சாய் பல்லவி
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் நடிகை சாய் பல்லவி. தனுஷூடன் இணைந்து ரவுடி பேபி பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் பட்டி தொட்டியெங்கும் பரவியது.
தொடர்ந்து ஷ்யாம் சிங்கா ராய், விராத பர்வம், கார்கி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட் திரையுலகில் நுழைந்துள்ளார்.
10 வருட காதல்
ரன்பீர் கபூர் ராமராக நடிக்கும் ராமாயணத்தில் சீதையாக சாய் பல்லவி நடித்து வருகிறார். படத்தின் முத்தக் காட்சிகளில் இருந்து விலகி இருக்கும் சாய்பல்லவி, மகாபாரதம் குறித்து சமீபத்தில் கூறிய கருத்துகள் வைரலாகி வருகின்றன.
”மகாபாரதம் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த 10 வருடங்களாக அபிமன்யுவைப் பற்றி நிறைய படித்து அறிந்துள்ளேன். அவரை கடந்த 10 வருடங்களாக காதலித்து வருகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.