என் காதலனுக்கு லவ் லெட்டர் எழுதி என் பெற்றோரிடம் தர்ம அடி வாங்கினேன்... - ரகசியத்தை போட்டுடைத்த சாய் பல்லவி
சாய் பல்லவி
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சிறுவயது முதல் நடனத்தில் அதிக ஆர்வம் கொண்ட சாய் பல்லவி 2008ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ என்ற நடனநிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதனையடுத்து, 2009ம் ஆண்டு இ.டி.வி. தெலுங்கு நிகழ்ச்சியான தி அல்டிமேட்டு டேன்சு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இதன் பின்பு, 2015ம் ஆண்டில் வெளிவந்த ‘பிரேமம்’ படத்தில் சாய் பல்லவி மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார். தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்த சாய் பல்லவிக்கு அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக அமைந்ததால், குறுகிய காலத்திலேயே சாய் பல்லவி முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
காதல் கடிதம் எழுதிய சாய் பல்லவி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேட்டி கொடுத்த நடிகை சாய் பல்லவி மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் பேசுகையில்,
நான் 7-ம் வகுப்பு படிக்கும் போது, காதல் கடிதம் எழுதி இருக்கிறேன். என்னுடன் படித்த ஒரு பையனுக்கு அந்த காதல் கடிதத்தை எழுதி இருந்தேன். அப்போ.. எனக்கு அறியாத வயசில் அந்த கடிதம் எழுதினேன். இதைப் பார்த்த என் பெற்றோர், என்னை அடித்து வெளுத்து வாங்கினர். அதிலிருந்து நான் வேற யாருக்கும் காதல் கடிதம் எழுதியது கிடையாது என்றார்.
தற்போது, இவர் நடித்துள்ள ‘கார்கி’ திரைப்படம் வரும் ஜூலை 15-ம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தமில்லாமல் திருமணம் செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகை நக்சத்ரா - வைரலாகும் புகைப்படம்