காஷ்மீர் படுகொலைக்கும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? - சாய்பல்லவி பேச்சால் சர்ச்சை

Sai Pallavi
By Nandhini Jun 16, 2022 07:28 AM GMT
Report

நடிகர் ராணா - நடிகை சாய்பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கும் படம்தான் ‘விரத பர்வம்’. இப்படம் நாளை (ஜூன் 17 ) வெளியாக இருக்கிறது. இப்படம் நக்சலைட்டுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சாய்பல்லவி நக்சலைட்டாக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சாய்பல்லவி பேட்டி

சமீபத்தில் விரத பர்வம் படம் குறித்து செய்தியாளர்கள் பேட்டியில் சாய்பல்லவி பேட்டி கொடுத்தார்.

அந்த பேட்டியில், தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் இடதுசாரி இயக்கங்களால் ஈர்க்கப்பட்டவரா என்று கேள்வி கேட்கப்பட்டது.

அந்த சாய்பல்லவி கூறுகையில்,

நான் நடுநிலையான குடும்பத்தைச் சேர்ந்தவள். எனக்கு நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்று கற்று கொடுக்கப்பட்டிருக்கிறது. இடதுசாரி, வலதுசாரி என இரண்டையும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எது சரி, எது தவறு என்று நம்மால் ஒருபோதும் கூற முடியாது.‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தில் பண்டிட்டுகள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதை காட்டியுள்ளனர்.

காஷ்மீர் படுகொலைக்கும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? - சாய்பல்லவி பேச்சால் சர்ச்சை | Sai Pallavi

ஆனால், சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. பசுவை கொண்டு சென்ற நபர் ஒரு இஸ்லாமியர் என்று கருதி கும்பலாக அவரை தாக்குகிறார்கள். அந்த நபர் கொலை செய்யப்பட்டவுடன் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்டனர். காஷ்மீரில் அன்று நடந்ததற்கும் தற்போது நடந்து கொண்டிருப்பதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? நீங்கள் நல்லவராக இருக்காவிட்டால், இடதுசாரியாக இருந்தாலும், வலதுசாரியாக இருந்தாலும் நீதி கிடைக்காது.

நான் நடுநிலையானவள். பெரிய எண்ணிக்கை கொண்ட மக்கள், சிறிய எண்ணிக்கை கொண்ட மக்களை தாக்கினால் அது தவறு. சரிசமமாக உள்ள இருவருக்கிடையேதான் போட்டி இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

தற்போது சாய்பல்லவி பேசும் அந்த வீடியோ காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ -