அஸ்வின் இடத்துக்கு ஆப்பு; சிறந்த ஸ்பின்னர் என்னை ஆடவையுங்க.. சாய் கிஷோர் அதிரடி
என்னை டெஸ்ட் போட்டியில் ஆட வையுங்கள் என சாய் கிஷோர் அறிவித்துள்ளார்.
சாய் கிஷோர்
முதல் தர டெஸ்ட் போட்டிகளில் 70 இன்னிங்க்ஸ்களில் 166 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார் தமிழக சுழற் பந்துவீச்சாளர் சாய் கிஷோர். கடைசியாக நடந்த ரஞ்சி டிராபி தொடரில் தமிழ்நாடு அணியின் கேப்டனாக செயல்பட்டார்.
9 போட்டிகளில் 53 விக்கெட்களை வீழ்த்தி ரஞ்சி தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இரண்டாவது பந்து வீச்சாளராக இருந்தார். 023 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்ற சாய் கிஷோர், மூன்று போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
அடுத்து துலீப் டிராபி தொடரில் இந்தியா பி அணியில் விளையாடவுள்ளார். இந்நிலையில் சாய் கிஷோர் அளித்த பேட்டியில், "நமது நாட்டில் இருக்கும் சிறந்த ஸ்பின்னர்களில் நானும் ஒருவன் என கருதுகிறேன். என்னை டெஸ்ட் போட்டியில் ஆட வையுங்கள். நான் தயாராக இருக்கிறேன்.
சிறந்த ஸ்பின்னர்
நான் எதை குறித்தும் கவலை அடையவில்லை. நான் ஜடேஜாவுடன் அதிகம் விளையாடியது இல்லை. சிஎஸ்கே அணியில் நாங்கள் ஒன்றாக இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் ஒன்றாக விளையாடியது இல்லை. எனவே, அவருடன் விளையாடுவது எனக்கு நல்ல கற்றல் அனுபவமாக இருக்கும்.
நான் இதை சொல்வதன் மூலம் தன்னம்பிக்கையுடன் இருப்பதாக உணர்கிறேன். முன்பு எப்போதை விடவும் நான் இந்திய அணிக்காக விளையாட தயாராக இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மறைமுகமாக மூத்த சுழற் பந்து வீச்சாளர்கள் அஸ்வின் இடத்தை தனக்கு அளிக்க வேண்டும் என கேட்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

viral video: பிரம்மாண்டமாக வளர்ந்த ராஜ நாகத்தை அசால்ட்டாக தூக்கிய நபர்! இறுதியில் என்ன நடந்தது? Manithan
