கோயில்களில் இருந்து சாய் பாபா சிலைகளை அகற்ற வேண்டும்..உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சாய் பாபா சிலைகளை அகற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சாய் பாபா
இஸ்லாமியராக பிறந்து இஸ்லாத்தையும், இந்து மதத்தையும் போதித்த சாய் பாபாவுக்கு ஷீரடியில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பல் இடங்களில் சாய் பாபா கோயில்கள் இருக்கிறது.
இந்நிலையில், ஆகம விதிகளுக்கு முரணாக பல இந்து கோயில்களில் சாய்பாபாவின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது.அந்த சிலைகளை அகற்ற அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோவையைச் சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
உயர்நீதிமன்றம்
அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் எதிர்காலத்தில் சாய் பாபா சிலைகள் அமைக்கப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதன்பிறகு, வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வு,இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.