சகுனி பட இயக்குநர் திடீர் மரணம் - பட நிகழ்ச்சிக்கு சென்ற போது நேர்ந்த சோகம்

Tamil Cinema Tamil Directors
By Karthikraja Dec 19, 2024 02:09 PM GMT
Report

சகுனி பட இயக்குநர் சங்கர் தயாள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

சங்கர் தயாள்

2012 ஆம் ஆண்டு கார்த்தி, பிரணிதா நடிப்பில் வெளியான சகுனி படத்தை இயக்கியவர் இயக்குநர் சங்கர் தயாள்.

sankar dayal saguni director

54 வயதான இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 

கலகலப்பு பட நடிகர் காலமானார் - திரையுலகம் அதிர்ச்சி

கலகலப்பு பட நடிகர் காலமானார் - திரையுலகம் அதிர்ச்சி

மாரடைப்பு

12 வருடங்களுக்கு தற்போது குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெறுவதாக இருந்தது. 

சங்கர் தயாள்

இந்நிலையில் திடீரென நெஞ்சு வலிப்பதாக சங்கர் தயாள் கூறியதையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் செல்லும் வழியிலே உயிரிழந்துள்ளார். இவரின் மறைவு தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.