எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு - மதுரையில் பரபரப்பு!
எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எம்ஜிஆர் சிலை
மதுரை, கேகே நகர் அதிமுக சார்பில் மாவட்ட நீதிமன்றத்தின் அருகில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலையானது நிறுவப்பட்டுள்ளன. இந்நிலையில், எம்ஜிஆரின் முழு உருவச்சிலையில் இன்று மதியம் மர்ம நபர்கள் காவித்துண்டை அணிவித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த பகுதிக்கு வந்த அண்ணாநகர் காவல் துறையினர் எம்ஜிஆர் சிலை மீது அணிவிக்கப்பட்டிருந்த காவிதுண்டைய அகற்றினர். எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டை அணிவித்தது யார் என்பது குறித்தான விசாரணையை நடத்து வருகின்றனர்.
அதிர்ச்சி
மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.