எம்ஜிஆருக்கு பிரம்மாண்ட ஆலயம் - அடிக்கல் நாட்டிய தீவிர பக்தர்கள்!

MGR Tamil nadu ADMK
By Sumathi Jun 10, 2022 03:52 PM GMT
Report

வேலூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் எம்ஜிஆருக்கு கோவில் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

 எம்ஜிஆர்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ரகுபதி நகர் பகுதியில் ராமச்சந்திரா சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் எம்ஜிஆர் பக்தர்கள் இணைந்து முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு கோவில் கட்ட முடிவெடுத்தனர்.

எம்ஜிஆருக்கு பிரம்மாண்ட ஆலயம் - அடிக்கல் நாட்டிய தீவிர பக்தர்கள்! | Temple For Former Cm Mgr At Vellore

அதனடிப்படையில் இன்று அப்பகுதியில் 80 சென்ட் நிலத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவில் கட்ட இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

 எம்ஜிஆர் வெங்கல சிலை 

அதிமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முரளி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் திரளான எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

எம்ஜிஆருக்கு பிரம்மாண்ட ஆலயம் - அடிக்கல் நாட்டிய தீவிர பக்தர்கள்! | Temple For Former Cm Mgr At Vellore

இதில் ஸ்ரீ சக்தி வராஹி குருஜி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். இந்த கோவிலானது வரும் ஜனவரி மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும்.

இதில் எம்ஜிஆர் வெங்கல சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. மேலும் அருகில் ஒரு மண்டபம் கட்டப்பட்டு, அனைவரும்

இலவசமாக திருமண நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தும் வகையில் அம்மண்டபம் பயன்பாட்டுக்கு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் முடிக்கப்படும் இந்த கோவிலை எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைப்பார்கள் என தெரிகிறது.