இசையுடன் வீடியோ வெளியிட்ட சத்குரு - உடல்நிலை எப்படி இருக்கு?
உடல்நலம் தேறி சத்குரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சத்குரு
கோவை ஈஷா மையத்தின் நிறுவனர் மற்றும் ஈஷா அறக்கட்டளையின் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ். சமீபத்தில் ஈஷா மையத்தில் நடந்த மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார்.
இதில், பிரபல நடிகர், நடிகைகள், பக்தர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டு டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடல்நிலை விவரம்
அங்கு அவருடைய மூளையில் நிறைய ரத்த கசிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அதன்பின், அவசரகால மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் குணமடைந்து வரும் சத்குரு செய்தித்தாள் ஒன்றை கையில் வைத்து, படித்தபடி இருக்கிறார்.
#Sadhguru #SpeedyRecovery pic.twitter.com/rTiyhYPiJM
— Sadhguru (@SadhguruJV) March 25, 2024
விரைவில் குணமடையவும் என்ற ஹேஷ்டேக்குடன் 19 விநாடிகள் ஓட கூடிய வீடியோ ஒன்றை பின்னணி இசையுடன் வெளியிட்டுள்ளார்.
சத்குருவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர் வினித் சூரி, சத்குரு உடல்நலம் தேறி வருகிறார். அவருடைய உடல் மற்றும் முக்கிய பாகங்கள் இயல்பு நிலைமைக்கு திரும்பி வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.