‘’ உஷ்..உஷ்.. கேமராவ ஆஃப் பண்ணுங்க ‘’ நேர்காணலில் கோபமான சத்குரு : நடந்தது என்ன?
ஈஷா யோக மையமும், அதன் நிறுவனர் ஜக்கி வாசுதேவின் செயல்பாடுகளும் எப்போதும் மர்மமானவை,ஜக்கியின் தொடர்புகள் எந்தளவுக்கு ஆச்சரியமூட்டக்கூடியதோ, அதே அளவுக்கு ஜக்கி தெரிவிக்கும் அரசியல் மற்றும் சமூகக் கருத்துக்கள் சில நேரங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் .
யோகாவும் மரங்களும்
ஜக்கி வாசுதேவ் -ன் யோகா முறைகளைப் பயின்றவர்கள், அதை சிலாகிக்கும் அளவுக்கு, அவரது ஈஷா யோகா மையத்தின் செயல்பாடுகளை அறிந்தவர்கள் அதிருப்தியும் தெரிவிக்கின்றனர். இந்தச் சிக்கல் அவரது ஆரம்ப காலகட்டம் முதலே இருந்து வந்தாலும் காடுகளை காக்க வேண்டும் மரங்களை வளர்க்க வேண்டும் என்ற இவரது கொள்கை அனைவரிடமும் வரவேற்பை பெற்றது .
கர்நாடகாவில் தனது சொந்த ஊரிலேயே சிறிய அளவில் ஒரு யோகா பயிற்சி மையத்தை நிறுவி, அனைவருக்கும் யோகா கற்றுக் கொடுக்கிறார். அதன்பிறகு, இந்தியா முழுவதும் பயணம் செய்து, தனது யோகா முறைகளைப் பலருக்கும் சொல்லிக் கொடுத்த ஜக்கி, கோயம்புத்தூருக்கும் அதுபோல் யோகா சொல்லிக் கொடுக்க வந்துள்ளார்.
நான் சாமியர் அல்ல
1994 காலகட்டத்தில் கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதி அருகே யோகா சொல்லிக் கொடுக்க வந்த ஜக்கி, அந்தப் பகுதி, கர்நாடகாவில் தனக்கு விருப்பமான சாமூண்டீஸ்வரி மலைப் பகுதியை நினைவுபடுத்தியதால், அங்கேயே முகாமிட்டார்.
ஆரம்பத்தில் சிறிய அளவில் சொந்தமாக இடத்தை வாங்கிப் பதிவு செய்த ஜக்கி, அதன்பிறகு அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி ஆசிரமத்தை விரிவுபடுத்தத் தொடங்கினார். தற்போது ஜக்கி தெரிவிப்பது ஆன்மிக கருத்துக்களை 1990-களில் அவர் பேசவில்லை.
அந்த சயமங்களில் அவர் தன்னை முற்போக்கான ஒரு சாமியராகவே காட்டிக் கொண்டார். 1990-களில் இறுதியில், 2000-த்தின் தொடக்கம் ஐ.டி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பொற்காலம் என்றே கூறலாம் அந்தத் துறையில் ஊதியம் இருந்த அளவுக்கு பணிச்சுமையும், மன அழுத்தமும் இருந்ததையொட்டி நிறைய ஐ.டி துறை பொறியாளர்கள் ஜக்கியிடம் வந்து யோகா கற்றுச் சென்றனர்.
அத்தனைக்கும் ஆசைப்படு
தமிழகத்தில் பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக, வசதியான மக்களிடமும் பொதுமக்களிடமும் பிரபலமானது, பின்னர் பிரபல பத்திரிகையில் அவர் தொடர் வெளியானதற்குப் பிறகுதான் இன்னும் பிரபலமாகின்றார் சத்குரு அத்தனைக்கும் ஆசைப்படுஎன்ற பெயரில் அந்தத் தொடர் வெளியானது.
அதற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட்டில் ஜக்கி கோல்ப் விளையாடுவது, பாம்புகளை கையில் பிடித்திருப்பது, விலையுயர்ந்த வெளிநாட்டு கார்கள் மற்றும் பைக்குகளை ஓட்டுவது, ஹெலிகாப்டரில் பறப்பது போன்று போஸ் கொடுத்திருந்தார். அது அந்த நேரத்தில் ஜக்கியை வித்தியாசமானவராகவும், அதே நேரத்தில் எளிய மக்களுக்கான சாமியார் அவர் இல்லை முழுக்க முழுக்க மேல் தட்டு மக்களுக்கான சாமியர் என்பதும் வெளிப்பட்டது.
அதன்பிறகு, ஈஷா யோகா மையத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. அந்த நேரத்தில், ஈஷாவை பெரியளவில் விரிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. ஈஷாவிற்குள் புதிய புதிய கட்டிடங்கள் கட்டணத்திற்கு தக்க ஹோட்டல் ரூம்களைப் போல் உருவாகத் தொடங்கின.
ஆதி சிவன்
அதற்குள் பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டன. இதற்கெல்லாம், அனுமதி வாங்குவதைப் பற்றி எந்தக் கவலையும் படாத ஜக்கி வாசுதேவ், கட்டிடங்கள் கட்டும் வேலைகளை மட்டும் செய்து கொண்டிருந்தார். உள்ளூர் மக்கள், உள்ளூர் அரசியல்வாதிகளின் எதிர்ப்பும் அந்த நேரத்தில் அதிகரிக்க ஆரம்பித்தது. அதை சமாளிக்க வேண்டுமானால், அரசியல் தொடர்புகளை அதிகரிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார் ஜக்கி.
அதன்பிறகு, ஆதியோகி என்ற பெயரில் சிவபெருமான் சிலை ஒன்றை 112 அடியில் நிறுவினார். அதை திறந்து வைத்தவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சிவராத்திரியில் கலந்து கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி அந்தச் சிலையை திறந்து வைத்தார்.
அதோடு அந்த விழாவில், அன்றைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி, அவரது ஒட்டுமொத்த அமைச்சரவையும் ஈஷா யோகா மைய விழாவில் கலந்து கொண்டது.
ஜக்கியின் நடன ஆவர்த்தனத்துக்கு முன்னால், தமிழகத்தின் அமைச்சர்கள் கையைக் கட்டிக் கொண்டு பக்தி பரவசத்தோடு, அமைதியாக உட்கார்ந்திருந்தனர். சென்னை உயர் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகளாக அப்போது இருந்த பலரும் அந்த விழாவில் பங்கெடுத்தனர்.
ஆரம்பமான சர்ச்சை
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஜக்கி வாசுதேவ் வேத இந்தியா, சமஸ்கிருதம், தனியார்மயம் என்று பேச ஆரம்பித்தார். குறிப்பாக, சிவபெருமானுக்குத் தமிழ் தெரியாது; சமஸ்கிருதம்தான் தெரியும்; அதனால், அனைவரும் சமஸ்கிருதம் கற்க வேண்டும்” என்று பேசியது தமிழ் ஆர்வலர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான் திமுக எம்.எல்.ஏ .ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அது தி.மு.க-வின் குரலாகத்தான் ஒலித்தது. அந்த சர்ச்சை ஒய்ந்த நேரத்தில் உலக அளவில் புகழ் பெற்ற செய்தி நிறுவனம் ஒன்று ஜக்கி வசுதேவினை நேர்காணல் செய்ய சென்றுள்ளனர்.
அப்போது கேள்வி ஒன்றில் நெறியாளர் சுற்றுச்சூழல் சார்ந்து மிகவும் அக்கறையோடு செய்படுகின்றது ஈழா அறக்கட்டளை ,ஆனால் அதே சமயம் சுற்றுச் சூழல் அனுமதி வாங்கவில்லை என்ற குற்றசாட்டு முன் வைக்கப்படுகின்றதே என்பதை கேட்டவுடன் மலர்ந்திருக்கும் சத்குரு முகம் சற்று மாறுகின்றது.
யார் சென்னாங்க நீங்க அரசு சொல்வதை கேட்பீர்களா? அல்லது உங்கள் பக்கத்து வீட்டில் உள்ள அரை மதி படைத்தவன் சொல்லை கேட்பீர்களா என கேள்விகேட்கிறார் சத்குரு .
அப்போது குறுக்கிடம் நெறியாளர் யோகா மையத்தின் கட்டுமானத்திறகு முன் கூட்டியே அனுமதி வாங்காமல் பின்பு வாங்கியது ஏன்? என கேள்வி கேட்கும் போது உஷ்..உஷ்.. என சப்தம் எழுப்பிய சத்குரு நாட்டில் அரசு உள்ளது சட்டம் இருக்கிறது அவர்கள் பாத்துகொள்வார்கள் விடுங்க எனக் கூற .
அப்போது நெறியாளர் குறுக்கிட்டு ஈஷாவில் சுற்று சூழல் பாதிப்பு இல்லை எனபதற்கு அனுமதி வாங்கவில்லை என குறிபிடப்பட்டுள்ளதே எனக் கூற உஷ் .. எனக் கூறும் சத்குரு சொல்றத கேளுயா நீ என்று கூற , அப்போது ஜக்கி வாசுதேவோடன் இருந்தவர்கள் , பிபிசியின் 3 கேமராக்களின் ஒளிப்பதிவை நிறுத்தி விட்டார்கள் என்று முடிவடைகிறது .
பொறுமையாக கேள்வி எதிர்கொள்ள துணிவில்லை
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) June 10, 2022
Shhh என சொல்வது
நெரியாளரை மரியாதையின்றி பேசுவது
ஆட்களை விட்டு camera off செய்வது
தைரியம் இல்லை என்றால் எதற்கு #அயோகியர்_வாசுதேவ் பேட்டி
First கோவத்தை குறைக்க உங்க ஆஸ்ரமத்தில் யோகா சேருங்க
மற்றவர்களுக்கு அப்புறம் பாடம் எடுங்க Fraudster. pic.twitter.com/eqd4hrTrLR
ஊடகங்களின் குரல் வலை கொஞ்சம் கொஞசமாக நெருக்கப்படுவதாக கடந்த சில நாட்களாக ஊடகவியலாளர்கள் கூறும் நிலையில் அமைதியின் சொரூபம் என்று புகழப்பட்ட சத்குரு ச கோபமாக பேசியுள்ளது இணையத்தில் அதிர்வலையினை ஏற்படுத்தியுள்ளது.