ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை - நலம் விசாரித்த பிரதமர் மோடி!

Tamil nadu Coimbatore Narendra Modi India
By Jiyath Mar 21, 2024 03:00 AM GMT
Report

சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஜக்கி வாசுதேவ் 

கோவை ஈஷா மையத்தின் நிறுவனரும், ஈஷா அறக்கட்டளையின் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைவலி காரணமாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார்.

ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை - நலம் விசாரித்த பிரதமர் மோடி! | Sadhguru Jaggi Vasudev Emergency Brain Surgery

அதில் அவரின் மூளையில் ரத்தப்போக்கு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜக்கி வாசுதேவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தாமரை சின்னத்திற்கு எதிரான வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

தாமரை சின்னத்திற்கு எதிரான வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

பிரதமர் மோடி

இதனைத் தொடர்ந்து அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை வழங்கப்பட்டு, தற்போது உடல்நலம் தேறி வருகிறார். இந்நிலையில் ஜக்கி வாசுதேவை தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அவரிடம் நலம் விசாரித்தார்.

ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை - நலம் விசாரித்த பிரதமர் மோடி! | Sadhguru Jaggi Vasudev Emergency Brain Surgery

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "சத்குரு ஜியிடம் பேசினேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய வாழ்த்தினேன்" என்று தெரிவித்துள்ளார்.