ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் இலவசமாக பங்கேற்பது எப்படி? முழு விவரம்!

Coimbatore Festival
By Sumathi Mar 07, 2024 10:00 AM GMT
Report

மார்ச் 8-ல் ஈஷா மஹாசிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது.

மஹாசிவராத்திரி

ஈஷாவில் 30-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மார்ச் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது.

isha centre

சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, ஆதியோகி திவ்ய தரிசனம் உட்பட பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறவுள்ளது.

தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, சைனீஸ், போர்ச்சுகீஸ், ஸ்பானீஸ், பிரெஞ்சு உட்பட 21 மொழிகளில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கோவை தவிர்த்து மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நாகர்கோவில் உட்பட 36 இடங்களில் நேரலை ஒளிப்பரப்பாக கொண்டாடப்படவுள்ளது.

ஈஷா மஹாசிவராத்திரி விழா; பிரம்மாண்ட ஏற்பாடு - குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு!

ஈஷா மஹாசிவராத்திரி விழா; பிரம்மாண்ட ஏற்பாடு - குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு!

ஆன்லைன் பதிவு

இந்த விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து இலவசமாக பங்கேற்கலாம். பங்கேற்கும் க்களுக்கு இரவு அன்னதானம் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

sathguru

இவ்விழாவில் இலவசமாக பங்கேற்க விரும்புவோர் https://isha.sadhguru.org/mahashivratri/ta/attend-in-person/ அல்லது isha.co/tnmsr2024-VAT என்ற லிங்கை பயன்படுத்தி உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை கொடுத்து இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.

இதில், இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.