அவரிடம் அனுமதி வாங்கித்தான் ஆதியோகி சிலை கட்டினோம் - ஈஷா புது விளக்கம்!
ஆட்சியரின் அனுமதி உட்பட தேவையான சட்ட அனுமதிகளை பெற்றே ஆதியோகி சிவன் சிலையை கட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதியோகி சிலை
சென்னையில் ஈஷா யோகா சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஈஷா யோக மையத்தின் நிர்வாகி தினேஷ் ராஜா கூறுகையில், “கோவையின் மிக முக்கிய ஆன்மிக அடையாளமாக விளங்கும் ஆதியோகி சிவன் சிலை கடந்த 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
பொதுவாக, இதுபோன்ற சிலைகளை நிறுவுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம். அந்த வகையில், ஆதியோகி சிலை அமைப்பதற்கு அனுமதி கோரி நாங்கள் 2016-ம் ஆண்டே விண்ணப்பித்துவிட்டோம்.
விளக்கம்
எங்களின் விண்ணப்பத்தை ஏற்று கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறைகளின் ஆய்வு அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் சிலை அமைப்பதற்கு 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஆதியோகி என்பது ஒரு சிலை; அது கட்டிடம் அல்ல. சிலை வைப்பதற்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியரிடம் தான் உள்ளது.
ஈஷா யாருடைய நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. அவர்கள் குறிப்பிடும் 44 ஏக்கர் நிலம் ஈஷாவின் பெயரில் இருப்பதை நிரூபித்தால் இப்போதே அதை திருப்பி கொடுக்க தயாராக உள்ளோம்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அனுமதி, வனத்தை அழித்து ஆதியோகி சிலை கட்டப்பட்டதாக கூறப்படும் பொய் குற்றச்சாட்டு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்ற வெற்று அவதூறுகள் எனத் தெரிவித்துள்ளார்.