அனுமதி பெறவில்லை என சொன்ன தமிழக அரசு; ஒப்புதல் இருக்கிறது - ஈஷா பதில்
ஆதியோகி சிலைக்கு உரிய ஒப்புதல் உள்ளதாக ஈஷா அறக்கட்டளை தகவல் தெரிவித்துள்ளது.
ஈஷா அறக்கட்டளை
ஈஷா ஃபவுண்டேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "ஆதியோகி சிலைக்கான உரிய ஒப்புதல்கள் எங்களிடம் உள்ளது, அதை எங்கேயும் எப்போதும் சமர்ப்பிக்க தயாராக உள்ளோம்.
ஆதியோகி சிலை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதிகளை பெற்றுள்ளோம். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிகாரிகள் முன் அதை சமர்ப்பிப்போம்" என்று தெரிவித்துள்ளது.
தமிழக அரசு
முன்னதாக வழக்கு விசாரணையின்போது, அரசுத்தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர்.அனிதா ஆஜராகி ஈஷா பவுண்டேஷனுக்கு கட்டடம் கட்ட அனுமதியோ, தடை இல்லா சான்றிதழோ பெறப்படவில்லை என்றும் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார்.
ஈஷா அறக்கடளை நிர்வாகமும், மனுதாரரும் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை கோவை நகர திட்ட இணை இயக்குநர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அதில் சம்பந்தப்பட்ட கட்டடம் கட்டுவதற்கான அனுமதி தரப்படவில்லை என்று தெரியவந்தால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.