சுற்றுசூழல் அனுமதி இல்லை: ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து!

Coimbatore Government of Tamil Nadu Madras High Court
By Sumathi Dec 14, 2022 11:20 AM GMT
Report

ஈஷா அறக்கட்டளைக்கு தமிழக அரசு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈஷா அறக்கட்டளை

சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக, விளக்கம் கேட்டு ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சுற்றுசூழல் அனுமதி இல்லை: ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து! | Cancellation Of Notice Isha Chennai High Court

தொடர்ந்து இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஈஷா அமைப்பில் 10 ஆயிரம் சதுர மீட்டர் மட்டுமே கல்வி நிறுவனமாக கருதலாம் என்றும் மற்ற பரப்பளவை கல்வி நிறுவனமாக கருத முடியாது என தமிழக அரசு வாதிட்டது.

 நோட்டீஸ் ரத்து

தொடர்ந்து, ஈஷா அறக்கட்டளை தரப்பில், உடல், மனம் மற்றும் நன்னெறி மேம்படுத்தம் நிறுவனங்களை கல்வி நிறுவனங்களாக தான் கருத வேண்டும் என்பதால் கல்வி நிறுவனமாக ஈஷா அமைப்பும் உள்ளதால் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என வாதிடப்பட்டது.

இதற்கிடையில், மத்திய அரசு தரப்பில் ஈஷா அறக்கட்டளை கல்வி போதிக்கும் நிறுவனம் என்பதால் சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில்,

4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தில் 1,25,000 சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேற்கொள்ளப்பட்ட கட்டுமானத்திற்குள் கல்வி நிலையங்களும் அமைந்துள்ளதால சுற்றுச்சூழல் அனுமதி விலக்கு பெற உரிமை உள்ளதாக தெரிவித்து ஈஷாவு அறக்கட்டளைக்கு தமிழக அரசு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டனர்.