ஒரே நாள் தான்...மொத்தமாக மாறிப்போன வாழ்க்கை!! பரிதாப நிலையில் சதா!
நடிகை சதாவின் வாழக்கையில் ஏற்பட்ட கடினமான சம்பவம் தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை சதா
தமிழில் ஜெயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சதா. முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றார்.
தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, போன்ற படங்களில் அஜித், விக்ரம், ஜெயம் ரவி, மாதவன் என பல முன்னணி நடிகர்களுடன் வலம் வந்தார். தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.
கடைசியாக தமிழில் டார்ச் லைட் என்ற படத்தில் நடித்திருந்த அவர் அதன் பிறகு பெரிதாக படங்களில் தோன்றவில்லை. நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகின்றார்.
கண்கலங்கினேன்
இந்நிலையில், அவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட கடினமான காலம் ஒன்றை குறித்து சினிமா செய்தியாளர் ஆர்.ஜே.ஷாவின் பேட்டி ஒன்றில் சதா தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், மும்பையில் காபி ஷாப் ஒன்றை ஆரம்பித்தார் என்று குறிப்பிட்ட சதா, அந்த ஷாப்பில் செடிகள் முதல் அங்கு இருக்கும் நாற்காலிகள் வரை அனைத்தையும் தானே பார்த்து பார்த்து அமைத்தேன் என்றார்.
பிசினஸ் கை கொடுக்க ஆரம்பித்த நிலையில், நிறைய பொருட்களை அக்கடையில் விற்பனை செய்ய துவங்கியதாக கூறி ஆனால் அவை அனைத்தும் சைவ பொருட்களே ஆகும் என குறிப்பிட்டார் சதா.பிசினஸ் நன்றாக சென்று கொண்டிருந்த போது, கடையை வாடகைக்கு விட்டவர் 30 40 நாட்கள் நேரம் எடுத்துக்கொண்டு கடையை காலி செய்யுங்கள் என்று திடீரென கூறியதாக சதா தெரிவித்தார்.
உரிமையாளரை எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்த நிலையிலும், உரிமையாளர் கேட்காத நிலையில், ஒவ்வொரு பொருளாக விற்று விட்டு, கடையை காலி செய்தேன் என்றும் கடைசி பொருளை விற்ற போது கண்கலங்கியதாக அந்த பேட்டியில் சதா தெரிவித்துள்ளார்.