நான் ஃப்ளூ பிலிம் நடிகையா...அது ரஜினிக்கு தெரியாதா..? கொந்தளிக்கும் ரோஜா

Rajinikanth Roja Tamil nadu Telangana
By Karthick Oct 09, 2023 05:07 AM GMT
Report

தொடர்ந்து நடிகை ரோஜா மீது அவதூறான கருத்துக்களை எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் பரப்பி வருகின்றனர்.

நடிகை ரோஜா விவகாரம்

நடிகையாக இருந்து தற்போது தெலுங்கானா மாநில அமைச்சராக இருக்கும் ரோஜா மீது தொடர்ந்து சில நாட்களாகவே அவர் மீது அம்மாநிலத்தில் பிரதான எதிர்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினர் தொடர்ந்து அவதூறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

roja-slams-rajini-in-blue-film-controversy

இந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பியும் ஏற்படுத்தி வரும் சூழலில், அது குறித்து தெலுங்கானா மாநிலத்தின் சுற்றுலா துறை அமைச்சர் ரோஜா தமிழகத்தை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் பேசும் போது, தான் முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து போது அக்கட்சியில் தான் மரியாதையுடன் நடத்தப்படவில்லை என்பதை கூறி, பின்னர் தான் அங்கிருந்து வெளியேறி ஒய்.எஸ்.ஆர் கட்சியில் இணைந்து தற்போது எம்.எல்.ஏ'வாக தேர்வாகி இருப்பதாக கூறினார்.

ஆபாசப்பட விவகாரம்: கஷ்டமாக இருந்தது..யார் அதிகாரம் கொடுத்தது? கொந்தளித்த மீனா!

ஆபாசப்பட விவகாரம்: கஷ்டமாக இருந்தது..யார் அதிகாரம் கொடுத்தது? கொந்தளித்த மீனா!

நான் ப்ளூ பிலிம் நடிப்பேன்'னானு ரஜினிக்கு தெரியும்

நான் நடித்த ஃப்ளூ பிலிம் வீடியோ இருப்பதாக சொல்கிறார்கள் - அப்படியிருந்தால் வெளியிட வேண்டியதுதானே என தெரிவித்த ரோஜா, 10 ஆண்டுகளாக இதைத்தான் சொல்கிறார்கள் என்றும் தனக்கு மன உளைச்சலாக இருக்கிறது என வேதனையுடன் கூறினார்.

roja-slams-rajini-in-blue-film-controversy

குடும்பத்தினர் தனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என குறிப்பிட்டு, என்டிஆரின் நூற்றாண்டு விழாவுக்கு வந்து சந்திரபாபு நாயுடுவை ரஜினிகாந்த் புகழ்ந்ததையும், சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராக வேண்டும் என்றும் பேசியிருந்ததை சுட்டிக்காட்டிய ரோஜா, சந்திரபாபு நாயுடு கட்சியினர் தன்னை பற்றி பேசும் போது ரஜினிகாந்த் குரல் கொடுத்திருக்க வேண்டும் என்றார். ரஜினியுடன் இரு படத்தில் நடித்திருந்தேன் என்ற ரோஜா, தன்னை பற்றி அவருக்கு தெரியும் என்றும் பெண்ணை பற்றி தவறாக பேசக் கூடாது என ரஜினி சார் சொல்லியிருந்தால் தான் அவருக்கு சல்யூட் அடித்திருப்பேன் என பேசினார்.