ஆபாசப்பட விவகாரம்: கஷ்டமாக இருந்தது..யார் அதிகாரம் கொடுத்தது? கொந்தளித்த மீனா!

Meena Roja Andhra Pradesh Tamil Actress Actress
By Jiyath Oct 09, 2023 03:54 AM GMT
Report

ஆபாசப்படம் தொடர்பான விவகாரத்திற்கு நடிகை ரோஜாவிற்கு ஆதரவு கொடுத்துள்ளார் நடிகை மீனா. 

நடிகை ரோஜா

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் நடிகை ரோஜா. அவர் மீது ஆந்திர முன்னாள் அமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகியுமான பண்டாரு சத்யநாராயண ராவ் ' நடிகை ரோஜா ஆபாச படத்தில் நடித்தவர்" என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

ஆபாசப்பட விவகாரம்: கஷ்டமாக இருந்தது..யார் அதிகாரம் கொடுத்தது? கொந்தளித்த மீனா! | Actress Meena Supported Roja In Abusive Comments

மேலும், நடிகை ரோஜா நடித்ததாக ஒரு சி.டி.யையும் சட்டசபையில் பண்டாரு காட்டியுள்ளார். இந்த விவகாரம் ஆந்திர மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக ரோஜாவும் கண்ணீர் மல்க பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் "நான் ஆபாச படத்தில் நடித்ததாக கூறி அவதூறு செய்கிறார்கள். உங்கள் வீட்டுப் பெண்கள் குறித்து இப்படி தரம்தாழ்ந்து பேசினால் நீங்கள் இதை ஏற்றுக்கொள்வீர்களா.

ஆபாசப்பட விவகாரம்: கஷ்டமாக இருந்தது..யார் அதிகாரம் கொடுத்தது? கொந்தளித்த மீனா! | Actress Meena Supported Roja In Abusive Comments

நான் நிர்வாண படத்தில் நடித்தவள் என்றால் என்னை ஏன் சந்திரபாபு நாயுடு தனது கட்சியில் சேர்த்தார். உங்கள் கட்சியில் இருந்தபோது நல்லவராக தெரிந்த நான், வேறு கட்சிக்கு சென்றுவிட்டபோது எப்படி கெட்டவராக இருக்க முடியும்? என்று ரோஜா பேசியிருந்தார்.

ஆபாச படத்தில் நடித்தேனா? உங்கள் வீட்டு பெண்களை இப்படி பேசினால் - நடிகை ரோஜா கண்ணீர்!

ஆபாச படத்தில் நடித்தேனா? உங்கள் வீட்டு பெண்களை இப்படி பேசினால் - நடிகை ரோஜா கண்ணீர்!

நடிகை மீனா ஆதரவு

இந்நிலையில் ரோஜாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து நடிகை மீனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மீனா பேசியதாவது "எல்லோருக்கும் வணக்கம்! பண்டாரு சத்யநாராயண ராவ், நடிகை ரோஜா ஆபாச படத்தில் நடித்தவர் என கூறியிருந்த வீடியோவை நான் பார்த்தேன்.

ஆபாசப்பட விவகாரம்: கஷ்டமாக இருந்தது..யார் அதிகாரம் கொடுத்தது? கொந்தளித்த மீனா! | Actress Meena Supported Roja In Abusive Comments

ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதே சமயம் ரொம்ப கோபமாகவும் இருந்தது. காலம் மாறிவிட்டது. பெண்கள் வலிமையுடையவர்கள் ஆகிவிட்டனர். பெண்கள் முன்னேற்றமும் வளர்ச்சி அடைந்துவிட்டது. இதெல்லாம் தெரியாம எத்தனை மோசமாக பேசியிருக்கீங்க நீங்க. இது ஒரு பெண்ணின் நடத்தையை மோசமாக விமர்சிப்பது. நீங்கள் ரோஜா மீது பொறாமையில் இருப்பதையே காட்டுகிறது. பாதுகாப்பின்மையில் இருப்பதை நீங்கள் உணர்வதாகவே காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் பெண்கள் எத்தனை மோசமான மனநிலையில் இருக்கிறீர்கள் என்று காட்டுகிறது. எப்படி ரோஜா குறித்து பொதுவெளியில் மோசமான கருத்தை சொன்னீர்களோ அதே போல் பொதுவெளியில் நீங்கள் (பண்டாரு) மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஆபாசப்பட விவகாரம்: கஷ்டமாக இருந்தது..யார் அதிகாரம் கொடுத்தது? கொந்தளித்த மீனா! | Actress Meena Supported Roja In Abusive Comments

ரோஜா சினிமா துறைக்கு வந்த போதிலிருந்தே எனக்கு அவரை தெரியும். ரோஜாவை ஒரு நடிகையாக. ஒரு பெண்ணாக, ஒரு அரசியல்வாதியாக ஒரு தாயாக ஒரு தோழியாக எனக்கு அவரை நன்றாகவே தெரியும். அப்போது முதல் இப்போது வரை ரோஜா எத்தனை கடும் உழைப்பாளி என்பது எனக்கு தெரியும். ரோஜா தான் கால் வைத்த சினிமா துறை, அரசியலிலும் குழந்தை வளர்ப்பிலும் ஒரு தாயாகவும் வெற்றி அடைந்துவிட்டார். அமைச்சர் ரோஜாவின் கேரக்டரை மோசமாக விமர்சிக்க பண்டாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நீங்கள் இப்படி ஒரு பெண்ணின் கேரக்டரை மோசமாக பேசிவிட்டால் பெண்கள் எல்லாம் பயந்து போய்விடுவார்கள் என நினைக்கிறீர்களா? நான் ரோஜாவின் போராட்டத்திற்கு ஆதரவு தருகிறேன்" என நடிகை மீனா கடுமையாக பேசியுள்ளார்.