ஆடையில்லாமல் வெளியான காட்சிகள்; கண்ணீர் விட்ட ரம்யா கிருஷ்ணன் - பகீர்!
நடிகை ரோஜா குறித்த சர்ச்சைக்கு ரம்யா கிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரோஜா குறித்த சர்ச்சை
ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் நடிகை ரோஜா. தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்திய நாராயணா
நடிகை ரோஜா ஆபாச படங்களில் நடித்துள்ளார் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதற்கு நடிகை ரோஜா, இப்போது நான் வேறு ஒரு கட்சியில் அமைச்சராக இருக்கும்போது அவதூறு பரப்புகின்றனர்.
ரம்யா கிருஷ்ணன் கண்டனம்
மேலும் தான் ஆபாசப் படத்தில் நடித்ததாகக் கூறி, மார்பிங் சிடிக்களை சட்டப்பேரவையில் காட்டுகின்றனர். உங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். நாளை இந்த நிலைமை உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் வரலாம் என வேதனை தெரிவித்தார். இந்நிலையில், இது பெரும் விவகாரமாக வெடித்த நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன்,
— Ramya Krishnan (@meramyakrishnan) October 7, 2023
அது யாராக இருந்தாலும் விடக்கூடாது. பாரத பிரதமர் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் பாரத் மாதா கி ஜே என்று கர்வமாக கூறுகிறோம். இதற்கு காரணம் இந்தியா என்ற தாயை பெண்ணாக மதித்து நாங்கள் அவரை கொண்டாடுகிறோம்.
அப்படியான நாட்டில் இப்படி பெண்களுக்கு எதிரான விஷயங்கள் நடக்கிறது. இதனை பாரத பிரதமர் சும்மாவே விடக்கூடாது எனக் கண்ணீர் மல்க பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.