ஆட்டுக் குட்டி கழுத்தில் அண்ணாமலை புகைப்படம் - நடுரோட்டில் பயங்கர சம்பவம்!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் ஆட்டை பலியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை
கோவை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,68,200 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
பரபரப்பு சம்பவம்
இந்நிலையில் அண்ணாமலை புகைப்படத்துடன் ஆட்டை நடுரோட்டில் பலியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டின் கழுத்தில் அண்ணாமலையில் புகைப்படத்தை கட்டி மர்ம நபர்கள் பலியிட்டுள்ளனர்.
மேலும், அவருக்கு எதிராகவும் கோஷமிட்டுள்ளனர். இந்த சம்பவம் எங்கு? எப்போது நடைபெற்றது என்பது குறித்து தெரியவில்லை. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.