பறிப்போன பதவி; அதிருப்தியில் அமைச்சர்கள் - என்ன பின்னணி!
அமைச்சரவை மாற்றத்தின் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமைச்சரவை மாற்றம்
தமிழக அமைச்சரவையில் இருந்து, மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து, புதிய அமைச்சர்களாக செந்தில்பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொன்முடி தொடர்ந்து கவர்னரை ஒருமையில் விமர்சித்து வந்தார். பல பல்கலைகள் நிதி இல்லாமல் சிரமப்படுகின்றன. துணைவேந்தர் நியமனத்திலும் இழுபறி நீடிக்கிறது. இது உயர்கல்வி துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தும். அதனால்தான், பொன்முடியிடம் இருந்து, உயர்கல்வி துறை பறிக்கப்பட்டுள்ளது.
பின்னணி
மனோ தங்கராஜ் சமூக வலைதளங்களில், பாஜக மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வந்தார். துறையின் முக்கிய அதிகாரிகளின் உத்தரவுகளை மீறி, தன் இஷ்டத்திற்கு ஒப்பந்ததாரர் தேர்வில், அவரது மகன் கவனம் செலுத்தியதாக கூறப்படுகிறது. மஸ்தான் கள்ளச்சாராய வியாபாரிக்கு கேக் ஊட்டி விடும் போட்டோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
கட்சியிலும், அரசு நிர்வாகத்திலும் குடும்பத்தினர் தலையீடு; அதிமுகவிற்கு அரசு வேலைகள் ஒதுக்கியது ஆகியவை கட்சியின் தலைமை கவனத்திற்கு கொண்டு சென்றனர். சுற்றுலா துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன், துறையில் சிறப்பாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
கட்சியினருடனும் சுமூக உறவு இல்லை. இதன் காரணமாக அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.