சச்சின் மகனின் ஏலத்தொகை எவ்வளவு தெரியுமா?
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபிஎல்-இல் வீரர்களை எடுக்கும் நிகழ்வு நேற்று நடந்தது. இதில் அதிக விலை கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தென்னாப்பிரிக்க வீரர் கிரிஸ் மோரிஸை எடுத்தது.
அவரது ஏலத்தொகை இதுவரை ஐபிஎஸ் கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரூ.16.25 கோடி. இப்படி பலரும் போட்டி போட்டுக் கொண்டு முன்னணி வீரர்கள் ஏலம் எடுத்த நிலையில், சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கரை யாரும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. கடைசியாக மும்பை அணி அர்ஜூன் டெண்டுல்கரை அடிப்படை விலையான 20 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
அர்ஜூன் டெண்டுல்கர் நீண்ட நாட்களுக்கு பிறகு சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் விளையாடினார். ஆனால் பெரிதாக அவர் சோபிக்கவில்லை. அதனால் அவரை மும்பை அணி ஏலத்தில் எடுக்காது என்று கூறிவிட்டது.
ஆனால் ரசிகர்கள் பலரும் மும்பை அணிக்காக அர்ஜூன் டெண்டுல்கரை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அதனால் அவர் அடிப்படை விலையில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறார்.
போதைப்பொருள் சூத்திரதாரி பாசிக்கின் துபாய் தங்க வியாபாரம்! இலங்கையில் மட்டும் 100 பில்லியன் சொத்துக்கள் IBC Tamil
தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறையால் நோயாளர்கள் அவதி: வவுனியா பொது மருத்துவமனையின் நிலை IBC Tamil
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil