ஆப்கன். அணியின் வெற்றிகளுக்கு காரணம் அந்த இந்திய வீரர்தான் - சச்சின் பாராட்டு!

Sachin Tendulkar Cricket Afghanistan Cricket Team ICC World Cup 2023
By Jiyath Oct 24, 2023 09:00 AM GMT
Report

ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு பின்னணியில் அஜய் ஜடேஜாவின் யோசனைகள் இருக்கும் என நம்புகிறேன் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 

ஆப்கானிஸ்தான் அணி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆப்கானிஸ்தான் அணி முன்பை விட சிறப்பாகவே விளையாடி வருகிறது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வென்றுள்ளது.

ஆப்கன். அணியின் வெற்றிகளுக்கு காரணம் அந்த இந்திய வீரர்தான் - சச்சின் பாராட்டு! | Sachin Tendulkar Praises Afghanistan Cricket Team

அதில் ஒரு போட்டியில் 2019 உலகக்கோப்பை சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. மற்றொரு போட்டியில் தங்களின் அண்டை நாடான பாகிஸ்தானை வீழ்த்தியது.

உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் முன், முன்னாள் இந்திய அணி கேப்டன் அஜய் ஜடேஜாவை தங்களின் ஆலோசகராக நியமித்தது ஆப்கானிஸ்தான் அணி. இந்நிலையில் 2 பெரிய போட்டிகளில் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிகளுக்கு காரணமாக அஜய் ஜடேஜாவை கை காட்டி இருக்கிறார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.

இந்தியாவை வீழ்த்தினால் வங்கதேச வீரருடன் அதற்கு நான் ரெடி - பாகிஸ்தான் நடிகை பகீர் வாக்குறுதி!

இந்தியாவை வீழ்த்தினால் வங்கதேச வீரருடன் அதற்கு நான் ரெடி - பாகிஸ்தான் நடிகை பகீர் வாக்குறுதி!

சச்சின் பாராட்டு

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "இந்த உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் செயல்பாடு மிக அபாரமாக உள்ளது. பேட்டிங்கில் அவர்கள் காட்டிய ஒழுக்கம், களத்தில் அவர்களின் சுபாவம், விக்கெட்கள் இடையே ஆக்ரோஷமாக ஓடுவது, இவை எல்லாம் அவர்களின் கடின உழைப்பை காட்டுகிறது.

ஆப்கன். அணியின் வெற்றிகளுக்கு காரணம் அந்த இந்திய வீரர்தான் - சச்சின் பாராட்டு! | Sachin Tendulkar Praises Afghanistan Cricket Team

இதன் பின்னணியில் அஜய் ஜடேஜாவின் யோசனைகள் இருக்கும் என நம்புகிறேன். இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகளை வீழ்த்தியதன் மூலம் புதிய ஆப்கானிஸ்தான் அணி உருவாகி இருப்பதை கிரிக்கெட் உலகம் குறித்து வைத்துக் கொண்டு இருக்கிறது" என சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டுள்ளார்.