சச்சின் மகனுக்கு ரகசிய நிச்சயதார்த்தம் - யார் இந்த சானியா சந்தோக்?
அர்ஜூன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
அர்ஜூன் டெண்டுல்கர்
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூனுக்கும், தொழிலதிபர் குடும்பத்தை சேர்ந்த சானியா சந்தோக் என்பவருக்கும் இரு குடும்பத்தார்கள் முன்னிலையில் நடைபெற்றது.
அர்ஜூன் டெண்டுல்கரும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறார். பிரீமியர் கிரிக்கெட் தொடரில் மும்பை அணியில் இடம்பிடித்து ஒருசில போட்டிகளில் விளையாடியுள்ளார்.
நிச்சயதார்த்தம்
மும்பையில் உள்ள சச்சின் டெண்டுல்கரின் ஆடம்பர வீடு தற்போது ரூ.100 கோடி மதிப்பு உள்ளது. லண்டனில் ஒரு ஆடம்பரமான வீடு உள்ளது. கிரிக்கெட்டில் இருந்து அவரது ஆண்டு வருமானம் சுமார் 50 லட்சம்.
அர்ஜுனின் ஆண்டு வருமானத்தில் சுமார் 75 முதல் 80 சதவீதம் ஐபிஎல் மூலம் வருகிறது. உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து சுமார் 25 சதவீதம் சம்பாதிக்கிறார். சானியா சந்தோக், ஹோட்டல், உணவு, ஐஸ்கிரீம் போன்ற
பல்வேறு துறைகளில் பல வணிக முயற்சிகளைக் கொண்ட ஒரு முக்கிய வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தாத்தா ரவி காய், மும்பையின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.