இந்தியாவின் மோசமான தோல்வி; இவர்கள்தான் காரணம் - மறைமுகமாக சாடிய சச்சின்
நியூசிலாந்து உடனான டெஸ்டில் இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின் கருத்து தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து டெஸ்ட்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது.
இதில் 3 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இந்திய கிரிக்கெட் அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது.
மோசமான சாதனை
12 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. மேலும் 136 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் அணியின் டாப் 8 பேட்டர்களில், 5 பேர் டக் அவுட் ஆன அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
இதனால் இந்திய கிரிக்கெட் அணி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சச்சின் விமர்சனம்
இதில், "சொந்த மண்ணில் 3 – 0 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததை ஏற்றுக் கொள்வது சற்று கடினமாக உள்ளது. தோல்விக்குக் காரணம் என்ன என்பதை சுய பரிசோதனை செய்யவேண்டியது கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
போதிய பயிற்சி இல்லையா? அல்லது நன்றாக விளையாடவில்லையா? எனத் தெரிந்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில், முதல் இன்னிங்ஸில் சுப்மன் கில் நன்றாக விளையாடினார். ரிஷப் பண்ட் இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடினார்" என கூறியுள்ளார்.
இதன் மூலம் சுப்மன் கில் ரிஷப் பண்ட் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடவில்லை என மறைமுகமாக சுட்டிக் காட்டி உள்ளார்.