டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆன இந்தியா - பல சாதனைகளை படைத்த நியூசிலாந்து
3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து கிரிக்கெட் அணி பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்தியா டெஸ்ட்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை வென்ற நியூசிலாந்து அணி, 3வது போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய கிரிக்கெட் அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது.
நியூசிலாந்து சாதனை
இதன் மூலம் நியூசிலாந்து கிரிக்கெட் அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. 3 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய முதல் அணி என்ற சாதனையை நியூசிலாந்து கிரிக்கெட் அணி படைத்துள்ளது.
1988 முதல் இந்தியாவில் ஆடிய 19 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறாத நியூசிலாந்து, கடந்த 18 நாட்களில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூரில் நடந்த டெஸ்டில் இந்தியா அணியை முதல் இன்னிங்சில் 46 ரன்களில் ஆல் அவுட் செய்ததன் மூலம், இந்தியாவை ஒரு இன்னிங்ஸில் 50 ரன்களுக்கு குறைவாக சுருட்டிய முதல் அணி என்ற சாதனையை நியூசிலாந்து படைத்துள்ளது.
அதிக டக் அவுட்
12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை சொந்த மண்ணிலேயே வீழ்த்தி தொடரை வென்ற அணி (0-3) இதற்கு முன்னதாக 2012ல் இங்கிலாந்திடம் (1-2) தோல்வியை சந்தித்திருந்தது.
136 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் அணியின் டாப் 8 பேட்டர்களில், 5 பேர் டக் அவுட் ஆன அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. மேலும், 3 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய வீரர்கள் அதிக டக் அவுட்(14) ஆனது இந்த தொடர்தான்.
சொந்த மண்ணில் நடந்த 3 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட தொடரில் ஸ்பின்னர்களிடம் அதிக விக்கெட்டுகளை(37) பறிகொடுத்துள்ளது இந்தியா. மேலும், சொந்த மண்ணில் நடந்த டெஸ்டில் முதல் முறையாக 2 இன்னிங்ஸ்களிலும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்துள்ளார் விராட் கோலி.