சிக்ஸில் சரித்திரம் படைத்த இந்தியா - டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத சாதனை
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத சாதனையை இந்தியா படைத்துள்ளது.
நியூசிலாந்து டெஸ்ட்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
5 சிக்ஸ்
இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் ஆடிய நியூசிலாந்து அணி 402 ரன்கள் எடுத்து, முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. இதன் பின் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்துள்ளது.
2வது இன்னிங்ஸில் இந்திய அணி 5 சிக்ஸ் அடித்த நிலையில், 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
முதல் அணி
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸ் அடித்த அணி என்ற சாதனையை இங்கிலாந்து அணி தனது கைவசம் வைத்திருந்தது. 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி 88 சிக்ஸர்களை அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.
இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலே இந்திய அணி இந்த சாதனையை தகர்த்தது. 93 சிக்ஸ் அடித்து முதலிடத்தில் இருந்தது.
தற்போது 102 சிக்ஸர் அடித்து ஒரே ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்ஸ் அடித்த முதல் அணி என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணி படைத்துள்ளது.