நல்லா நம்ப வைத்து விஜய்யை ஆனந்த் ஏமாற்றுகிறார் - வைரலாகும் எஸ்.ஏ.சி வீடியோ
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் ஏமாற்றுவதாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பரபரப்பு குற்றசாட்டை வைத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நிலையில், தற்போது அரசியல் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை நிறுவியுள்ள அவர், கடந்த மாதம் முதல் கட்சியில் ஆட்களை சேர்க்கும் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளார்.கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியை துவங்கிய சில நாட்களில் 50 லட்ச உறுப்பினர்கள் இணைக்கப்பட்டதாக அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதனை தொடர்ந்து இது வரை எத்தனை பேர் கட்சியில் இணைக்கப்பட்டார்கள் என்பது வெளியிடப்பவில்லை.
கட்சியில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி'க்கு தற்போது வரை எந்த வித பொறுப்பும் அளிக்கப்படவில்லை. விஜய் நடிகராக அறிமுகமாகி அவருக்கு அரசியல் தெளிவை புகுத்தியதில் எஸ்.ஏ.சி'யின் பங்கு அளப்பரியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஏமாற்றுகிறார்கள்
ஆனால், கடந்த சில காலமாக இருவருக்கும் சில பிரச்னைகளை இருப்பதாக செய்திகள் வெளியாகிய வண்ணமே உள்ளன. இது குறித்தான எந்த வித உறுதிப்டுத்தப்பட்ட தகவலும் இல்லை என்ற போதிலும், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் குறித்து எஸ்.ஏ பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூகவலைத்தளத்தில் பரபரப்பட்டு வரும் வீடியோவில் ஆனந்த், விஜய் உட்பட 50 பேர் இருக்கும் ஒரு சமூக வலைதளபக்கத்தை வைத்து அதில், கட்சிக்காக ஆனந்த் கஷ்டப்படுவது போன்ற பதிவுகள் போடப்படுகின்றன.
இதற்கு பலரும் லைக் செய்யும் நிலையில், இதனை பார்த்து ஆனந்த் கட்சிக்காக கடினமாக உழைப்பதாக விஜய் நினைக்கிறார் என்றும் அவரை ஏமாற்றுகிறார்கள் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுவது போல உள்ளது.