விஜய் CAA அறிக்கை 2 வரி'ல தான் இருக்கு..இன்னும் முழுசா..! கமீலா நாசர் பரபரப்பு பேட்டி
நடிகர் நாசரின் மகன் பைசல் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம்
கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி கட்சியை துவங்கிய நிலையில், மார்ச் 8-ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கையை துவங்கினார் நடிகர் விஜய். அதற்கான தனி செயலியை தனியாக ஆரம்பித்து தன்னை முதல் நபராக இணைத்து கொண்டார் விஜய்.
அதனை தொடர்ந்து பலரும் கட்சியில் இணைந்த நிலையில், 2 நாட்களில் 50 லட்ச பேர் கட்சியில் இணைத்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிரபல நடிகர் நாசரின் மகன் பைசல் தன்னை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்து கொண்டார்.
அது தொடர்பாக செய்தி வெளியான நிலையில், தனது மகன் குறித்து கமீலா நாசர் பேசியுள்ளது கவனத்தை பெற்றுள்ளது. அவர் பேசியது வருமாறு,
2 வரி தான்
என்னுடைய மகன் சிறு வயதிலிருந்தே விஜய்யின் வெறித்தனமான ரசிகன். சில வருடங்களுக்கு முன் விபத்து ஏற்பட்டு எங்களையே நினைவு இல்லாமல் இருந்த போதும் அவனுக்கு விஜய் சார் மட்டும் தான் நினைவில் இருந்தார். அவன் குணமாக வேண்டும் என்பதற்காக விஜய் வீட்டுக்கே வந்து ஆறுதல் கூறினார்.
சி.ஏ.ஏ குறித்து விஜய் அறிக்கை வெளியிட்டதை நாம் எல்லாம் பாராட்டணும். இரண்டு வரியில அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் என கிண்டல் செய்கிறார்கள். அவர், இன்னும் அரசியலில் முழுவதுமாக இறங்கவில்லை.
ஆனா, அவரோட கையெழுத்தைத் தாங்கி இந்த அறிக்கை வந்ததே பெரிய விஷயமாக பார்க்கிறேன். மூன்று நான்கு பக்கம் அறிக்கை வெளியிட வேண்டும் என்ற அவசியமில்லை.