வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை - ஜெயம் ரவி விவாகரத்து பின்னணி!! புது கதை சொன்ன பிரபலம்

Karthick
in பிரபலங்கள்Report this article
நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து பேச்சுக்கள் பெறும் வைரலாகி வருகின்றன.
விவாகரத்து
தமிழ் சினிமாவின் வேகமாக வளர்ந்து வரும் இளம்கதாநாயகர்களில் ஒருவரான ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்து அண்மை காலமாக பல கருத்துக்கள் பரவி வருகின்றன.
இது இன்னும் அதிகாரப்பூர்வமாக எங்கும் பதிவாகவில்லை என்ற போதிலும் இது தொடர்பாக பல கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் நாள் ஒன்றிற்கு எழுந்து வருகின்றது. அப்படி தான் தற்போது ஒரு தகவல் வளம் வருகிறது.
வளர்ப்பு மகன்
இது தொடர்பாக பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் பேசும் போது, ஜெயம் ரவி மாமியார் சுஜாதா சுஜாதாவின் வளர்ப்பு மகன் சங்கர் என்று ஒருவர் இருப்பதாகவும், சுஜாதாவின் தயாரிப்பு பணிகளை அவரே முழுமையாக கவனித்து கொள்கிறார்.
அப்படி தான் ஒரு கட்டத்தில் சங்கருக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
ஆர்த்தியின் அம்மா சுஜாதா சங்கர் சொல்வதை ஜெயம் ரவி கேட்க வேண்டும் என்று அறிவுத்தினார். அதற்கு ஜெயம் ரவி மறுக்க, அக்கோபத்தை ஆர்த்தி மீது காட்டிய நிலையிலேயே இந்த விவகாரம் விவாகரத்து வரை வந்திருப்பதாக சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.