நிறை புத்தரிசி பூஜை - சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை புத்தரிசி பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது.
சபரிமலை
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் நாட்டில் விவசாயம் செழித்து வறுமை நீங்க புத்தரிசி பூஜை நடத்தப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டு நாளை (12 ஆம் தேதி) புத்தரிசி பூஜை நடைபெற உள்ளதால் இதற்காக இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடையை மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி அவர்களால் திறக்கப்பட உள்ளது.
சிறப்பு பூஜை
மேலும் நாளை அதிகாலை 5.45 முதல் 6.30 வரை பாலக்காடு, அச்சன்கோவில் பகுதிகளில் இருந்து அறுவடை செய்த நெற்கதிர்களால் சிறப்பு பூஜை நடைபெறவுள்ளது.
ஐயப்பனுக்கு படைத்து பூஜை செய்யப்பட்ட நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் . பின்பு புத்தரிசி பூஜை முடிந்தபின் நாளை இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும் .