சபரிமலை நடை திறப்பு - ஆவணி மாத சிறப்பு பூஜை! பக்தர்கள் அனுமதி!

opens sabarimalai temple 10 days for pooja
By Anupriyamkumaresan Aug 10, 2021 07:47 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சமூகம்
Report

ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 15-ந் தேதி திறக்கப்படுகிறது.

இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைப்பார் என்று கூறியுள்ளார்.

சபரிமலை நடை திறப்பு - ஆவணி மாத சிறப்பு பூஜை! பக்தர்கள் அனுமதி! | Sabarimalai Temple Opens 10 Days For Pooja

மறுநாள் 16-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் நடைபெறும், அதைதொடர்ந்து 23-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

இந்த நாட்களில் வழக்கமான பூஜைகளுடன், உதயாஸ்தமன பூஜை, சகஸ்ர கலச பூஜை, நெய்யபிஷேகம், களபாபிஷேகம், படி பூஜை ஆகியவை நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனத்திற்காக அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

21-ந் தேதி ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகள் நடைபெறும். 6-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

சபரிமலை நடை திறப்பு - ஆவணி மாத சிறப்பு பூஜை! பக்தர்கள் அனுமதி! | Sabarimalai Temple Opens 10 Days For Pooja

மேலும், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

சான்றிதழ் இல்லாதவர்கள் முன்பதிவு செய்து இருந்தாலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.