"சபரிமலை அரவணையில் பூச்சிமருந்து கலந்த ஏலக்காய்"!! அதிரடியாக உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!!

Kerala Sabarimala
By Karthick Nov 09, 2023 05:57 AM GMT
Report

பூச்சி மருந்து கலந்த ஏலக்காயை பயன்படுத்திய சுமார் 6.65 லட்ச அரவணை டின்கள் தனியாக வைக்கப்பட்டுள்ளது.

சபரிமலை அரவணை

திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்த்தம் என்பதை போல சபரிமலைக்கு அரவணை. பல தரப்பட்ட மக்களும் இதனை விரும்பி உட்கொள்வர். ஆனால் தற்போது இந்த அரவணையில் பூச்சிமருந்து கலந்த ஏலக்காய் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sabarimala-aravana-pesticide-laced-cardamom-case

கடந்த மகர விளக்கு பூஜை சீசனின்போது, அரவணையில் அதிக அளவு பூச்சி மருந்து இருப்பதாக அரசு அறிக்கை வெளியிட்டடிருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த ஜனவரி மாதம் அரவணை உற்பத்தி நிறுத்தப்பட்டது.

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இது கட்டாயம் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இது கட்டாயம் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு

பூச்சி மருந்து கலந்ததாக குறிப்பிடப்பட்ட 6.65 லட்சம் அரவணை டின்கள் தனியாக வைக்கப்பட்டன. இருப்பினும், உச்சநீதிமன்ற உத்தரவினை அடுத்து நடத்தப்பட்ட தீவிர சோதனையில் அரவணை சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது தான் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிக்கப்பட்டு 6 மாதங்களுக்குள் அரவணை உட்கொள்ளப்படவில்லை என்றால், அது உண்ண முடியாததாகும்.

sabarimala-aravana-pesticide-laced-cardamom-case

இதன் காரணமாக கடந்த ஆண்டு மகர பூஜையின் போது, தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கும் 6.65 லட்சம் அரவணை டின்களை அப்புறப்படுத்தி அழிக்க கேரள அரசுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு அனுமதி கோரியது,. இந்த மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம், பூச்சிக்கொல்லி மருந்து கலந்த ஏலக்காயை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அரவணையை அழிக்க அனுமதி அளித்துள்ளது.