நெருங்கும் தவெக மாநாடு.. ஆட்சி அமைப்பது குறித்து தந்தை சொன்ன பதில்!

Vijay Viluppuram Thamizhaga Vetri Kazhagam
By Vidhya Senthil Oct 25, 2024 03:58 AM GMT
Report

 கொரட்டூரில் உள்ள சாய் பாபா கோயிலில் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர்- ஷோபா ஆகியோர் சிறப்பு வழிபாடு செய்தனர்.

தவெக மாநாடு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம், 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.

sa-chandrasekar

இதனையடுத்து  டெல்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்திலும் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் திரைப்படத்தில் நடிப்பதற்கு முழுக்கு போட்டுவிட்டு, முழுநேர அரசியலில் கவனம் செலுத்த உள்ளார்.

விஜய்யை கண்டு தமிழக அரசுக்கு பயம்; அதனால்தான் இப்படி.. தமிழிசை சவுந்தரராஜன் காட்டம்!

விஜய்யை கண்டு தமிழக அரசுக்கு பயம்; அதனால்தான் இப்படி.. தமிழிசை சவுந்தரராஜன் காட்டம்!

இந்த தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாநாடு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

எஸ்.ஏ.சந்திரசேகர்

இந்த நிலையில், தவெக மாநாடு வெற்றி பெற, விஜய்க்குச் சொந்தமான கொரட்டூரில் உள்ள சாய் பாபா கோயிலுக்கு அவரது பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர்- ஷோபா ஆகியோர் நேரில் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஜய்யின் தந்தை சந்திரசேகர் ,’’“தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும்.

vijay parents

தளபதிக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும். அவர் பெரிய நிலைமைக்கு வர வேண்டும். தமிழ்நாட்டிற்கு ஒரு பொக்கிஷம் கிடைக்க வேண்டும் என்று வேண்டி விஜய்க்காக, வடசென்னையைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள், மகளிர் அணியினர் இணைந்து கொரட்டூர் பாபா கோவிலில் அன்னதானம் செய்திருந்தனர்” என்றார்.