2 மாசமா ஏதோ ஒரு மாதிரியாக இருக்கு.. நடிகர் விஜய்யின் தந்தைக்கு நேர்ந்தது என்ன? - இமோஷனல் பதிவு!
நடிகர் விஜய்யின் தந்தை வெளியிட்ட தகவல் வைரலாகி வருகிறது.
S.A சந்திரசேகர்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்தவர் இயக்குநர் S.A சந்திரசேகர் . இவர் 1981-ம் ஆண்டு வெளிவந்த "சட்டம் ஒரு இருட்டறை" என்ற படத்தின் மெல்லாம் தமிழ் சினிமாவில் இயக்குனாராக அறிமுகமானார்.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப் படங்களை இயக்கியுள்ளார். பல வருடங்களாக இயக்குனராக பணியாற்றிவந்த இவர் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
வெளியான தகவல்
இந்நிலையில், இவர் தற்பொழுது தனது வாழ்க்கை பற்றி பேசி ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார். அதில், "நான் எப்போதுமே சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடன் தான் இருப்பேன். எல்லோருமே என்னை இந்த வயதிலும் எப்படி என்று பாராட்டுவார்கள். ஆனால், இரண்டு மாதங்களாக எனக்கு ஏதோ ஒரு மாதிரியாகவே இருந்தது. எனக்கே முன்பு போல் என்னுடைய உடம்பு இல்லையோ என்று தோன்றியது.

இதனால் நான் உடனே மருத்துவர் அணுகினேன். அவர் எனக்கு ஸ்கேன் டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்க்கும்போது ஒரு சின்ன பிரச்சனை ஆப்ரேஷன் செய்யணும் என்று சொன்னார். சரின்னு சொல்லி ஆப்ரேசன் செய்தேன், இரண்டு நாட்களிலேயே நான் குணமாகி விட்டேன்.
தற்போது நன்றாக இருக்கிறேன். இதை நான் எதற்கு சொல்கிறேன் என்றால், எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் தைரியத்துடனும், பாசிட்டிவான ஒரு செயல்பட்டால் உடனடியாக தீர்வு நல்லாதாக தான் இருக்கும்" என்று கூறியுள்ளார்.
இலங்கை வந்த வத்திக்கான் வெளியுறவு அமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு : குழம்பியது பயணத்திட்டம் IBC Tamil